Friday, June 6, 2014

நாட்டில் சிகரெட் விற்பனை குறைந்துள்ளது..(சரத் அமுனுகம


நாட்டில் 2011ஆம் ஆண்டில் 4,505 மில்லியனாகவிருந்த சிகெரட் விற்பனை 2012 ஆம் ஆண்டில் 4310 மில்லியனாக குறைத்துள்ளது. இதன் மூலம் 195 மில்லியன் அளவில் சிகரெட் விற்பனை குறைந்துள்ளதாக பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று சபையில் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய் மூல கேள்விக்கான விடை நேரத்தின் போது ஐ.தே.கட்சி எம்.பி. புத்திக பத்திரண நாட்டின் சிகரெட் விலைகள் அதிகரிப்பு, பாவனை தொடர்பாக கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார்.
 
பிரதி அமைச்சர் இதற்கு தொடர்ந்து பதிலளிக்கையில், 2002 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தனிநபர் வருமானம் மற்றும் தேசிய உற்பத்திகள் உயர்வுக்கேற்ப சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
 
சிகரட் விற்பனையில் கோல்ட் லீப் வர்க்க சிகரெட்களே 85 வீதம் விற்பனையாகியுள்ளன.
 
ஒரு சிகரெட் விற்பனை மூலம் அரசுக்கான வருமானம் 71 சதமாகும். எஞ்சிய 29 சதம் விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகளுக்கு புகையிலை கம்பனிக்கு செல்கிறது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment