Friday, June 6, 2014

வவுனியவில் மறுபடியும் வழிப்பறி


நேற்று மாலை காலை நேரம் போல் வந்த நபர் 45 வயது 
மதிக்கத்தக்க பெண் ஒருவரை வழிமறித்து விலாசம் கேட்பது




 போல் அவர் கழுத்தில் இருந்த நகைகளை பறித்தது சென்றுள்ளார். 
இதனால் பெண்கள் நகைகளை வெளியில் போட்டு செல்ல சிந்திக்கின்றனர்.

நாட்டில் சிகரெட் விற்பனை குறைந்துள்ளது..(சரத் அமுனுகம


நாட்டில் 2011ஆம் ஆண்டில் 4,505 மில்லியனாகவிருந்த சிகெரட் விற்பனை 2012 ஆம் ஆண்டில் 4310 மில்லியனாக குறைத்துள்ளது. இதன் மூலம் 195 மில்லியன் அளவில் சிகரெட் விற்பனை குறைந்துள்ளதாக பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று சபையில் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய் மூல கேள்விக்கான விடை நேரத்தின் போது ஐ.தே.கட்சி எம்.பி. புத்திக பத்திரண நாட்டின் சிகரெட் விலைகள் அதிகரிப்பு, பாவனை தொடர்பாக கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார்.
 
பிரதி அமைச்சர் இதற்கு தொடர்ந்து பதிலளிக்கையில், 2002 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தனிநபர் வருமானம் மற்றும் தேசிய உற்பத்திகள் உயர்வுக்கேற்ப சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
 
சிகரட் விற்பனையில் கோல்ட் லீப் வர்க்க சிகரெட்களே 85 வீதம் விற்பனையாகியுள்ளன.
 
ஒரு சிகரெட் விற்பனை மூலம் அரசுக்கான வருமானம் 71 சதமாகும். எஞ்சிய 29 சதம் விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகளுக்கு புகையிலை கம்பனிக்கு செல்கிறது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Facebook இனால் நடந்த விபரீதம்






வவுனியா கோவில்குளத்தில் நேற்று மாலை நேரத்தில் இச் 
சம்பவம் நடைபெற்றுள்ளது வீட்டில் மகன் இருக்கிறார் என்ற 
நம்பிக்கையில் கோவில்க்கு சென்ற அம்மா வந்து பார்க்கும் போது 
வீட்டு மேல் பகுதியால் உள்புகுந்து 34 சவரான் நகைகளை திருடி 
இருந்தமை தெரிய வந்தது. ஆனால் அடுத்த அறையில் இருந்த 
மகனுக்கு தெரியவில்லை காரணம் மகன் Facebook இல் சக நண்பர்களுடன் 
Chat இல் இருந்ததுதான். மேலும் இது பற்றி போலீஸார் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்ிருக்கின்றனர்

அரசன்குளம் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு



வவு­னியா ஓமந்தை அர­சன்­குளம் பகு­தி­யில புகை­யி­ரத பாதை­யோ­ர­மாக ஆண் ஒரு­வரின் சடலம் அடி­பட்­ட­கா­யங்­க­ளுடன் நேற்றுக்காலை மீட்­கப்­பட்­டுள்­ளது.



 
இது­வ­ரையில் அடை­யாளம் காணப்­ப­டாத சட­ல­மா­னது சுமார் 60 வயது மதிக்­க­தக்க வெள்ளை நிற சேட்டும் வெள்ளை நிற வேட்­டியும் அணிந்­தி­ருந்த நிலையில் மீட்கப்­பட்­டுள்­ளது. இச்­ச­டலம் தலைப்­ப­கு­தியில் அடி­பட்­ட­கா­யங்­க­ளுடன் உடல் பகு­தியில் ஆங்காங்கே சிறு காயங்­க­ளுடன் காணப்­ப­டுகி­றது.
 
புகை­யிர­தத்தில் பயணிக்கும் பொழுது தவறி விழுந்­தி­ருக்­கலாம் அல்லது யாரா­வது தள்ளி விழுத்­தி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டுகி­றது. நேற்று அதி­காலை குறித்த பிர­தே­சத்தின் பிர­தே­ச­வாசி மாடு மேய்ப்­ப­தற்­காக சென்­றி­ருந்­த­வேளை அடை­யாளம் காணப்­பட்டு பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டது.
 
கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் நோக்கி சென்ற புகை­யி­ர­தத்தில்பயணித்த பயணியாக இருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

ரயிலில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலி



கொழும்பில் இருந்து பளை நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதி ரயிலில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.



வவுனியா - ஓமந்தை பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 கொழும்பில் இருந்து பளை நோக்கி சென்ற கடுகதி ரயிலில் இருந்தே இவர் 
வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   சடலம் பிரேத பரிசோதனைக்காக 
வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வவுனியாவை ஆக்கிரமித்து வரும் பாதீனியம்



வவுனியா மாவட்டத்தில் பாதீனியம் களை மிக வேகமாக பரவி வருவதனால் விவசாயிகள் உட்பட பிரதேச மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.




வயல்நிலங்கள், போக்குவரத்து பாதையோரங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வியாபித்து பரவிவரும் களையானது பயிர்ச்செய்கைகள் மற்றும் கால் நடைகளை பாதிப்பதாக விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்திய இராணுவம் வடக்கை ஆக்கிரமித்திருந்த காலத்தில் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகளின் மூலமாக இக்களை இப் பிரதேசத்திற்கு வந்திருப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள் இதனை கட்டுப்படுத்துவதற்கு முறையான செயன்முறை இன்மையே காரணமெனவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ஒரு பாதீனியம் களையில் இருந்து பத்தாயிரம் வரையான புதிய களைகள் தோன்றுவதாக தெரிவிக்கும் விவசாய திணைக்கள அதிகாரிகள் மக்களிடம் முறையான விழிப்புணர்வின்மையே இக்களையை கட்டுப்படுத்த முடியாமைக்கு காரணமெனவும் தெரிவிக்கின்றனர்.
பயிர் நிலங்களில் இக்களை வளர்வதனால் ஏனைய பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படுவதுடன் உற்பத்தியும் குறைவடைந்து செல்கின்றது.
எனவே இக்களையை கட்டுப்படுத்துவதற்கு முறையான செயற்பாடுகளை விவசாய திணைக்களங்கள் முன்னெடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருமலை மாவட்டத்தில் 385 பேருக்கு டெங்கு தாக்கம், இருவர் உயிரிழப்பு


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 385பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளானதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர் என  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனுஷியா ராஜ் மோகன் தெரிவித்தார்.
 
 
அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- 
கடந்த மே மாதத்தில் மாத்திரம் 9 பேர் இந்நோயின்  தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இருவர் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


கிண்ணியா பிரதேசத்தில் இந்த நோயின் கடுமை காரணமாக  ஒருவர் மார்ச் மாதத்திலும் மற்றொருவர் மே மாதத்திலும் மரணமாகியுள்ளனர்.
 
எனவே, டெங்கு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாவட்டம் முழுவதும் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் டெங்கு பெருக்கத்துக்கான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இது விடயத்தில் விழிப்புடன் உதவவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.